கார்ப்பரேட்டுக்கு விலைபோகாத அஜித். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கால்ஷீட் கிடையாது.

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் வலிமை திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல இடங்களில் படப்பிடிப்பை நிறுத்த சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. அதனால் வலிமை சூட்டிங் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்படியிருக்க தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் வினோத் இயக்க இருக்கிறார் என்ற தகவல் ஒரு பக்கம் காட்டுத்தீயாய் பரவி வருகிறது, அதுமட்டுமில்லாமல் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை கார்பரேட் நிறுவனமான சன் பிக்சர் தான் தயாரிக்கப் போவதாகவும் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் அது தவறான தகவல் என தற்பொழுது உண்மை வெளியாகியுள்ளது.

இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என்றும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துடன் நேரடியாக தல அஜித் இதுவரை இணைந்து நடித்தது இல்லை என்பதை உறுதி செய்துள்ளார் என்றே கூறலாம், அதேபோல் தல அஜித் முழுமையாக ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு அல்லது அடுத்த படத்தை பற்றிய தகவலை வெளியிடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் தல 61 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வலிமை திரைப்படம் முடிந்த பிறகே வெளியிடப்படும் என தெரிகிறது.

Leave a Comment