விடாமுயற்சியை தொடர்ந்து சென்டிமென்ட் இயக்குனருடன் கை கோர்த்த அஜித்.! தலைவா அதமட்டும் செய்யாதிங்க புலம்பலில் ரசிகர்கள்…

ajith next movie director
ajith next movie director

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் கடைசியாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருந்தார். அதே போல் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

அப்படி இருக்கும் வகையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பெரிதாக பிடிக்கவில்லை என்பதால் உடனடியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் 62 திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார் அவருக்கு பதிலாக தடையற்த் தாக்க, மீகாமன், தடம், கழகத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அஜித் திரைப்படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அதுமட்டுமில்லாமல் அஜித்தின் 62 ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்ற தலைப்பு வைத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை முடித்த பிறகு அடுத்தது யார் இயக்கத்தில் யார் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் அஜித் அடுத்ததாக நடிக்க போவதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் அப்படி இருக்கும் நிலையில் மீண்டும் அஜித் சிறுத்தை சிவா  இயக்கத்தில் நடிக்க இருப்பதால் அஜித் ரசிகர்கள் பலரும் இந்த முறை சென்டிமென்ட் வேண்டாம்  டைட்டில் மாசாக வையுங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.