வசூலில் உலகம் முழுவதும் மாஸ் காட்டும் நேர்கொண்டபார்வை.! தெறிக்கவிடும் தல

0
nerkonda paarvai
nerkonda paarvai

தல அஜித் இந்த வருடத்தின் வசூல் மகனாக இருக்கிறார், இந்த வருடத்தில் இவர் நடித்த விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் தான் நல்ல விமர்சனங்களைப் பெற்று  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது வசூலில் கல்லா கட்டியது.

அதேபோல் தற்போது வெளியாகியுள்ள நேர்கொண்டபார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பெண்களின் பிரச்சினையை பேசும் திரைப்படமாக அமைந்துள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை வெளியாகி பத்து நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதை அஜித் ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகிறார்கள்.