அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழகத்தில் திரையிட பிரபல நடிகர்

0

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாக இருக்கிறது, இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார் படத்தில் அஜித் ஒரு வக்கீலாக நடித்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் தீம் பாடல் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலானது அது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த திரைப்படத்தில் மூன்று பெண்கள் பணக்காரர்களின் சூழ்ச்சியால் மாட்டிக்கொள்கிறார்கள் அதிலிருந்து அஜித் எப்படி மீட்டெடுக்கிறார் அவர்களை என்பதுதான் படத்தின் கதை.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெளிநாட்டு வியாபாரம் மற்றும் மற்ற மாநிலங்களில் வியாபாரம் அணைத்தும் ஆகிவிட்டது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வியாபாரம் ஆகாமல் இருந்தது இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்குவதற்கு முன் வந்துள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.