ajith : நடிகர் அஜித் வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த திரைப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் அபிராமி வெங்கடாசலம், இவர் சமீபத்தில் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
நடிகை அபிராமி வெங்கடாச்சலம் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடித்தது பற்றி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார், அவர் கூறியதாவது நேர்கொண்டபார்வை படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே அஜித் அவர்கள் அழைத்து டின்னர் கொடுத்தாராம், அதனால் அவருடன் பயப்படாமல் நடித்தேன் எனவும் கூறினார் அபிராமி.
மேலும் அஜித் சாரை யாருக்கும் தெரியாமல் சைட் அடித்தேன் எனவும் கூறியுள்ளார் அப்படித்தான் ஒரு முறை அஜித் சாரை சைட் அடித்துக் கொண்டிருக்கும் போது அஜித் சாரிடம் மாட்டி கொண்டேன் அப்பொழுது அஜித் சார் என்னை பார்த்து சிரித்து விட்டுச் சென்றார் எனக் கூறியுள்ளார்.
