நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! இப்போது கட்அவுட், பேனர்கள் வைக்க அஜித் ரசிகர்கள் ஆர்வம்.!

0

அஜித் தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரீமேக்காக இருந்தாலும் சமூகத்திற்கு மிக முக்கியமான கதையாக இருப்பதால் இந்த படத்தில் நடிப்பதற்கு அஜித் சம்மதம் தெரிவித்தார்.

மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தார்கள், இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது, மேலும் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து எந்த பாடலும் வெளியாகாமல் இருந்தது இந்த நிலையில் இன்று ஒரு லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

படத்தை வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் ரிலீஸ் செய்ய இருந்தார்கள் ஆனால் அதற்கு முன் கூட்டியே நேர்கொண்ட பார்வை ரிலீசாகும் என தகவல் வெளியாகி உள்ளன அதாவது வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நேர்கொண்ட பார்வை ரிலீசாகும் என தகவல் லீக் ஆகியுள்ளது.

அதனால் அஜித் ரசிகர்கள் இப்பொழுது கட்அவுட் பேனர்கள் வைக்க தொடங்கிவிட்டார்கள்.