நேர்கொண்ட பார்வை திரைவிமர்சனம்.!

0
Ajith
Ajith

தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது, எப்பொழுதும் கமர்ஷியல் படமாக வெற்றி கொடுத்து வரும் அஜித் நாம் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என நினைத்து சமூக அக்கறையோடு முக்கிய பிரச்சினையை பேசும் படமாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

இந்த திரைப்படத்தில் ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோர்கள் தங்களுக்கு பிடித்தமாதிரி மிகவும் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், இப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களது சந்தோஷத்தை குறைத்துக் கொள்ளாத இவர்கள் ஒருநாள் தங்களது நண்பர்களுடன் ரூமில் இருக்கிறார்கள் அப்போது ஒரு ஆண் நபர் ஷ்ரத்தாவிடம் எல்லை மீறுகிறார். இங்குதான் வெடிக்கிறது பிரச்சனை.

தன்னிடம் எல்லைமீறும் ஆண் அவர்களை பாட்டிலில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து வருகிறார். ஆனால் இவர்கள் பாட்டிலால் அடித்ததோ மிகப்பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகள், இவர்களிடம் சிக்கினால் அவ்வளவுதான் என்ற அளவிற்கு பெரிய இடத்து பிள்ளைகள், இந்த விவகாரத்தால் அந்த பெரிய இடத்துப் பிள்ளைகள் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள், இதை அனைத்தையும் அஜித் கவனித்து வருகிறார்.

இப்படி கவனித்து வரும் அஜித்திற்கு இந்த வழக்கு அஜித்தே எடுக்கும் நிலை வருகிறது அதன் பிறகு அஜித் அந்த பெண்களுக்கு எப்படி நீதி வாங்கித் தருகிறார் என்பது தான் மீதிக்கதை.

படத்தில் அஜித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதற்கு வார்த்தையே இல்லை, ஏனென்றால் இன்னும் ஹீரோயின்களுக்கு அட்வைஸ் செய்து பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது போல் ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார், மாஸ் படங்களை நடித்து விட்டு ஹிட் கொடுக்கும் நடிகர்கள் மத்தியில் இது போல் ஒரு வித்தியாசமான கதைகளில் நடிக்க அஜித் முன்வந்ததற்கு அஜித்தை பாராட்டலாம்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே வினோத்தின் வசனங்கள் தான் ஒவ்வொரு இடத்திலும் வசனம் மிகவும் அருமையாக வந்துள்ளது, அது மட்டும் இல்லாமல் ஷ்ரத்தா டாப்ஸி அளவிற்கு மிகவும் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் ஒவ்வொரு முறையும் யாராவது தன்னை காப்பாற்றுவார்களா இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர முடியுமா என்ற பதற்றம் ஷ்ரத்தாவிடம் இருக்கிறது படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்தப் பதற்றம் தெரிகிறது.

என்னதான் பிங்க் படத்தை ரீமேக் என்றாலும் படத்தின் வசனத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அனைவருக்கும் புரியும்படி இயக்கியது வினோத்தின் திறமை இவரின் திறமையை அனைவரும் பாராட்டலாம், அதுமட்டுமல்லாமல் அஜித்திற்கு என்ற ஒரு ஆக்ஷன் ஒரு காதல் என அனைத்தையும் படத்துடன் ஒத்து வருவது போல் இயக்கியுள்ளார் வினோத்.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் கோர்ட்டுக்குள் தான் நடைபெறுகிறது என்றாலும் எந்த இடத்திலும் போரடிக்காமல் மிகவும் அற்புதமாக கொண்டு சென்றுள்ளார் வினோத், படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து வசனங்கள் அனைத்தும் அழுத்தமாகக் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் நார்த் மற்றும் ஈஸ்ட் பெண்கள் சென்னையில் படும் கஷ்டத்தை வசனம் மூலம் கூறியுள்ளார்.

படத்தில் யுவனின் இசை பாடல்களை கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார் அதேபோல் நீரோவ்ஷா ஒளிப்பதிவு அற்புதமாக இருந்துள்ளது எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை, ஆக மொத்தத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் தான்.

நேர்கொண்ட பார்வை = 3.5/5