முதல் நாள் வசூல்களிலேயே பட்டையை கிளப்பிய நேர்கொண்டபார்வை.!

0

அஜித் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் சென்னை வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

நேற்று வெளியாகியுள்ள நேர்கொண்டபார்வை திரைப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளதாக பல விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள், ஆனால் நேற்று விடுமுறை நாள் இல்லை என்றாலும் மொத்த வசூல் 1.58 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள், வேலை நாட்களில் இவ்வளவு வசூல் செய்தது மிகப்பெரிய சாதனைதான் அதுமட்டுமில்லாமல் இன்னும் மூன்று நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ள கதை என்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, நேற்று ரோகிணி திரையரங்கில் பல சினிமா பிரபலங்கள் படத்தை கண்டுகளித்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை ரசித்தார்கள்,.

அஜித் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் வசூலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அளவில் இரண்டாம் இடத்தை நேர்கொண்டபார்வை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள் முதல் இடத்தில் இன்னும் விசுவாசம் நிலையாக இருப்பதாகவும் வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்.