தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சென்னையில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0

தல அஜித் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கியுள்ளார், படத்தை வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அனைத்து திரையரங்குகளிலும் கட்அவுட் பேனர்கள் வைத்து மிகவும் அமர்க்களப் படுத்தி வருகிறார்கள், மேலும் அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டார் போனி கபூர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை சென்னை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல் பிரபலமுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். இதை தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.