தமிழ் சினிமாவில் மேகா ஸ்டார்களில் ஒருவர் அஜித், இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர், பெரும்பாலும் எந்த ஒரு படம் நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார், அதேபோல் அவரைக் காண்பது மிகவும் கடினம் தான், ரசிகர்களுடன் கூட அவ்வளவாக பார்க்க முடிவதில்லை.
மேலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது ஆனால் நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார், ரசிகர் மன்றமே இல்லாமல் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், அதேபோல் அஜித் நீண்ட வருடத்திற்கு முன்பு எனது ரசிகராக இருந்தால் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் என முந்தைய பேட்டியில் கூறியிருந்தார்.

திரைப் பயணத்தில் எப்போது வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதை கடைப்பிடிப்பவர் அஜித் அதனால் பாலா இயக்கத்தில் நான் கடவுள் திரைப்படத்தில் முதலில் அஜீத் தான் நடிக்க இருந்தார், ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போனது பின்புதான் ஆர்யா கமிட்டானார்.

இந்த நிலையில் நான் கடவுள் திரைப்படத்திற்காக அஜித் அகோரியாக கெட்டப் போட்டுள்ளார் அந்த புகைப்படம் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.


