மிரட்டல் வில்லனுடன் மோதும் அஜித்.! வலிமை திரைப்படத்தில் சண்டைக் காட்சிக்கு பஞ்சமே இருக்காது போல.!

valimai shooting start
valimai shooting start

தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது, படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

மேலும் வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாக இருக்கிறது படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார், இந்த நிலையில் படத்தில் ஹீரோயின் யார் என்ற தகவல் இதுவரை படக்குழு வெளியிடவில்லை, அதேபோல் படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த அருண் விஜய் தான் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, ஆனால் தற்போது வந்த தகவல்படி அஜித்திற்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க இருக்கிறார்.

இவர் இதற்குமுன் லீடர், ஆர்எக்ஸ் 100 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர், அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதால் அஜித்துடன் மோதுவதற்கு இவர் கரெக்டாக இருப்பார் என பலரும் கூறுகிறார்கள்.