அஜித்தின் வலிமை படத்தின் ரகசியத்தை கூறிய யுவன் ஷங்கர் ராஜா.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.

0
ajith
ajith

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த தல60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தை வினோத் தான் இயக்க இருக்கிறார், படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தல60 திரைப்படத்திற்கு தற்போது வலிமை என டைட்டில் வைத்துள்ளார்கள்.

சமீபத்தில் வலிமை படத்தின் பூஜை நடைபெற்றது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள், அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் உலக நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, அதுமட்டுமில்லாமல் படத்தில் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறும் எனவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற யுவன் சங்கர் ராஜா தல60 திரைப்படத்திற்கு இசை அமைக்கிறேன் என கூறினார் இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனவும் கூறினார் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.