மீண்டும் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித். தல60 பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் இதோ

0
Thala-60
Thala-60

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படம் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது, இந்த திரைப்படத்தில்தான் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு தல60 என தற்காலிமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது, அஜித் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, அதேபோல் படத்தில் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு அஜித் நடிப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அஜித்திற்கு பல ஆபரேஷன்கள் செய்துள்ளதால், அஜித் ரிஸ்க் எடுக்கக் கூடாது என டாக்டர்கள் பலமுறை கூறி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அதிரடியாக உடற்பயிற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் அஜித் படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, மங்காத்தா திரைப்படத்தைப் போல் இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.