படம் வெளிவந்து ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள OTT தளத்தில் வெளியாகும் வலிமை.!

அஜித் ரசிகர்கள் பல வருஷங்களாக எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம்தான் வலிமை ஒருவழியாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால் படம்.

எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.  வலிமை திரைப்படம் தமிழில் தாண்டி கன்னடம் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தை பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது வழக்கம்.  ஆனால் வலிமை படத்தை பெண்கள் வேற லெவெலில் கொண்டிருக்கின்றனர் இன்னமும் வலிமை படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருப்பதால் நல்ல வசூலைப் பெற்றது.

மட்டுமல்லாமல் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கொண்டாடுகின்றனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இப்பொழுது அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக வலிமை திரைப்படம் இருப்பதாகவும் நல்ல லாபத்தை அனைவருக்கும் பெற்று கொடுத்ததாகவும் விநியோகஸ்தர்கள்  கூறிவருகின்றனர்.

திரைப்படம் இதுவரை 220 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படம் ஒரு வழியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வலிமை படம் வெளிவந்து ஒரு மாதமே ஆகாத நிலையில் வலிமை திரைப்படம் ஒரு வழியாக மார்ச் 20ம் தேதி ஓடிடி  தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிமை படம் ZEE 5 OTT தளத்தில் வருகிற 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

 

Leave a Comment