அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் திடீர் மரணம்.! அதுவும் அஜித்தின் இத்தனை திரைப்படத்தை தயாரித்தவரா அதிர்ச்சியாகும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இவர் அஜித்தின் நண்பர் ஆவார். அஜித்தை வைத்து இவர் பல திரைப்படங்களை தயாரித்தவர் அதிலும் இவர் தயாரிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ஹிட் திரைப்படங்கள் ஆகியுள்ளன. அஜித்தை தூக்கி நிறுத்தியவர்  என்று கூட கூறலாம்.

அஜித்தை வைத்து 1997 இல் ராசி, 1999இல் வாலி, இரண்டாயிரத்தில் முகவரி, 2001 இல் சிட்டிசன், 2002 ஆம் ஆண்டு ரெட், 2002 ஆம் ஆண்டு வில்லன்,  2003 ஆம் ஆண்டு ஆஞ்சநேயா, 2005 ஆம் ஆண்டு ஜி,  2006 ஆம் ஆண்டு வரலாறு,  என அஜித்தின் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார். அஜித் திரைப்படத்தை தொடர்ந்து  விக்ரமின் காதல் சடுகுடு, சிலம்பரசனின் வாலு, சிம்பு நடிப்பில் காளைஅதேபோல் சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் ஆகிய திரைப்படங்கள் இவர் தயாரித்த திரைப்படம் தான்.

இதில் அஜித்துடன் தான் பல திரைப்படங்களை தயாரித்தார் அஜித்தும் இவரும் மிகவும் நெருக்கமானவர்கள் ஆனால் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் இருவரும் இணைந்து படம் செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இவருக்கு நோய் அதிகமானதால் திடீரென எஸ் எஸ் சக்கரவர்த்தி மரணம் அடைந்துள்ளார் இவரின் மரணம் திரை உலகில் பலரையும் அதிர்ச்சியில் அழுத்தி உள்ளது.

ajith chakravarthi
ajith chakravarthi

Leave a Comment