அஜித்தின் படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் இதுதான்.! உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது எச்  வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சில பைக்ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் இடம் பெறும் என படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது அதனால் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்காக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது அதில் வலிமை திரைப்படமும் ஓன்று.

அதனால் படக்குழு சென்னைக்கு திரும்பி உள்ளார்கள், இது ஒருபுறம் இருக்க இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜி படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார், அவர் கூறியதாவது ஜி படம் தோல்வி அடைந்ததற்கு நான் தான் காரணம், ஏனென்றால் அஜித்திற்கு இப்படி ஒரு கதையில் நடிப்பதற்கு இஷ்டம் இல்லை.

அதேபோல் தயாரிப்பாளர் கூறிவிட்டார் என நான் இந்த திரைப்படத்தில் வேலைபார்க்க முடிவெடுத்தேன் அதேபோல் அஜித் சாரும் தயாரிப்பாளர் கூறிவிட்டார் என அரைமனதோடு இந்த திரைப்படத்தில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் அஜித் சார் இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஆனால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை.

அதனால் படமும் எதிர்பார்த்த நிலையை அடையவில்லை என லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

Leave a Comment