பாலிவுட்டில் அஜித் படம்.! கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்று தந்தது என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தில் அஜீத் குமாருடன் தமன்னா, சந்தானம், பிரதீப் ரவட், நாசர், அதுல் குல்கர்னி, தம்பி ராமையா, மயில்சாமி, மனோ சித்ரா, தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரம்.

இந்த திரைப்படத்தை தற்போது பாலிவுட்டில் பிரபு தேவா அவர்கள் இயக்கவுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகரான  சல்மான்கான் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியது. இந்த வீரம் படத்தை தமிழில் சிவா அவர்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

veeram
veeram

அதாவது பாலிவுட் சினிமாவில் சல்மான் கானின் மார்க்கெட் குறைந்ததால் தற்போது ஹிட் கொடுக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய தேவையில் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அங்க திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாகவே வீரம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment