90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் இந்த நடிகை விஜயகாந்த், அஜித், விக்ரம், அருண் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ஆனாலும் இன்று இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை இந்த நிலையில் தன்னுடைய நட்சத்திர கணவருடன் திரை விழாக்களில் பங்கேற்று வருகிறார் திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
அவர் வேறு யாரும் கிடையாது பிரியங்கா உபேந்திரா. இவர் தற்பொழுது ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் உபேந்திராவின் காதல் மனைவி தான் பிரியங்கா ஆனால் இவருடைய உண்மையான பெயர் பிரியங்கா திரிவேதி திருமணத்திற்கு பிறகு தன்னுடைய பெயரை பிரியங்கா உபேந்திரா என மாற்றிக்கொண்டார்.
கொல்கத்தாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பெங்காலி சினிமாவில் நடித்து வந்தார் அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார் 2002 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய ராஜ்ஜியம் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார் அதேபோல் அஜித் நடிப்பில் வெளியாகிய ராஜா திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ஜோதிகா தான் கதாநாயகி என்றாலும் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா நடித்து அதிக கவனம் ஈர்த்தார்.

அதிலும் குறிப்பாக அஜித் இவரை தயிர்சாதம் என்று செல்லமாக கூப்பிடுவார் அந்த சீன் ரசிகர்கள் மத்தியில் பிரியங்காவிற்கென தனி இடத்தை பிடித்துக் கொடுத்தது. அதேபோல் அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக காதல் சடுகுடு திரைப்படத்தில் ஐஸ் என்கின்ற படத்திலும் பிரியங்கா நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது 12 வருடங்களுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவில் செப்டம்பர் 21 என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதில் கேர் டேக்கர் வேடம் ஏற்றிருக்கிறார் அதன்படி ஒரு வீட்டில் பராமரிப்பாளர் வேடத்தில் நடித்த அவரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.