மெகாஹிட் திரைப்படத்தை தவறவிட்ட அஜித்.! கெட்டியாக பிடித்து மேலே ஏறிய சூர்யா.!

0
suriya
suriya

பொதுவாக சினிமாவில் முன்னணிநடிகர்களுக்காக பல இயக்குனர்கள் கதை எழுதி வைத்திருப்பார்கள் ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் வேறு வழியே இல்லாமல் வேறொரு நடிகரை நடிக்க வைப்பார்கள் அந்த திரைப்படமும் மெகா ஹிட் அடித்து விடும் அதன் பிறகு ஏன்டா இதில் நடிக்கவில்லை என பல முன்னணி நடிகர்கள் வருத்தமடைந்தது உண்டு.

எந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வசூலில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது அதேபோல் நடிகர் சூர்யா அவர்களும் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகராக இருக்கிறார்.

அன்பான ரசிகர்கள் மீது விசுவாசமாக இருக்கிறார் அதனால் அதற்காக கடுமையான கதையை தேர்வு செய்து நடித்து வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் இந்தநிலையில் அஜித் அவர்கள் தவறவிட்ட திரைப்படத்தில் சூர்யா நடித்து சூர்யாவின் சினிமா கேரியரை உயர்த்திக் கொண்டார்.

நந்தா, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்கள் முதலில்அஜித்திற்காக தான் எழுதப்பட்ட கதை. அதேபோல் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிப்பதற்கு அஜீத்தை அணுகி உள்ளார்கள். ஆனால் அஜித் நடிக்க முடியாமல் போனதால் சூர்யா நடித்து மாபெரும் ஹிட்டடித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த லிஸ்டில் முதல் திரைப்படமாக அஜித் நடிக்க இருந்த நேருக்கு நேர் திரைப்படத்திலும் சூர்யா  நடித்து மார்கெட்டை உயர்த்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படங்களில் அஜித் தான் முதல் சாய்ஸாக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சூர்யா தன்னுடைய முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா மற்றும் அஜித் சிறந்த நட்பை வெளிப்படுத்தி வந்தாலும்  அஜித்துடன் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை ஆனால்  விஜய் விக்ரமுடன் ஒரு சில திரைப்படங்களில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.