அஜித் மிஸ் செய்த திரைப்படத்தில் ஜீவா நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் என்ன தெரியுமா.?

ajith Missed movie : தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஊரடங்கு முடிந்ததும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் தல அஜித் இந்த திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பிடித்த பைக் ரேஸ் காட்சி மற்றும் கார் சேசிங் காட்சிகள் படத்தில் இடம்பெறும் என சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் வலிமை திரைப்படத்தின் தீம் மியூசிக் மரண மாஸ் ஆக இருக்கும் என கூறுகிறார்கள் ஏனென்றால் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார் எனக் கூறப்படுகிறது. தல அஜித் தமிழ் சினிமாவில் என்னதான் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் இவர் சினிமா பயணத்தில் பல திரைப்படங்களை தவறவிட்டுள்ளார் அந்த திரைப்படத்தில் மற்றொரு நடிகர் நடித்து மெகா ஹிட்டான திரைப்படங்கள் பல இருக்கின்றன.

அந்த வகையில் அஜித் மிஸ் செய்த திரைப்படம் கோ இந்த திரைப்படத்தை கே வி ஆனந்த் தான் இயக்கினார், முதலில் கோ திரைப்படத்தின் கதையை தல அஜீத்துக்காக தான் எழுதப்பட்டதாம். ஆனால் தல அஜித் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கிடைக்கவில்லை அதனால் அடுத்ததாக சிம்புவை வைத்து தொடங்குவதாக இருந்தார் கேவி ஆனந்த் ஆனால் அதுவும் செட் ஆகாததால் பின்பு இந்த திரைப்படம் ஜீவாவிடம் சென்றது.

ஜீவா நடித்து மெகா ஹிட் ஆன கதை அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Leave a Comment