அஜித் நடிக்க மறுத்த கதையில் ஜீவா நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் தெரியுமா? வெளியான ஷாக் தகவல்.!

Ajith missed Movie : தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது வசூல் மன்னனாக வலம் வருகிறார் சமீபத்தில் வெளியான அஜித்தின் திரைப்படம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தல அஜித் பல மெகா ஹிட் திரைப்படங்களை தவற விட்டுள்ளார் அந்த திரைப்படங்களில் மற்ற நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது, அப்படிதான் அஜித்திற்காக எழுதப்பட்ட கதையில் ஜீவா நடித்து மெகா ஹிட் ஆனா திரைப்படத்தை பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. கேவி ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஜீவா நடித்த திரைப்படம் கோ, இந்த திரைப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து அஜ்மல் அமீர், கார்த்திகா நாயர், பியா பாஜ்பாய் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் ஜீவா ஒரு புகைப்பட கலைஞராகவும் ஊடகத் துறையில் வேலை செய்பவராகவும் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலில் கேவி ஆனந்த் அஜீத்துக்காக தான் எழுதினாராம், ஆனால் கால்ஷீட் காரணமாக அஜித் இந்த திரைப்படத்தை நிராகரித்துள்ளார்.

அதன்பின்பு இந்த திரைப்படம் சிம்புவிடம் சென்றது சிம்புவை வைத்து இயக்கலாம் என திட்டமிட்ட போது சிம்பு படப்பிடிப்பிற்கு வர மாட்டார் என தயாரிப்பாளர்கள் சிம்புவிற்கு மறுப்பு தெரிவித்தார்கள், அதன் பின்புதான் இந்த படம் ஜீவாவின் கையில் சென்றது பின்பு ஜீவா நடித்து மெகா ஹிட்டானது.

இந்த திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் எனக்கூறலாம்.

Leave a Comment