தல அஜித் டெல்லிக்கு சென்று இந்த பெண்ணை ஏன் நேரில் சந்தித்தார் தெரியுமா.! இந்தப் பெண் யார்.! இதோ மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரை ரசிகர்களால் அன்போடு அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைப்பார்கள். தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்  இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படமாக இருக்கும் என படத்தை இயக்கும் இயக்குனர் கூறியுள்ளார்.

தல அஜித்திற்கு கார், பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் காரைவிட பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அஜித் படம் என்றாலே கார் ரேஸ் அல்லது பைக் ரேஸ் இடம் பிடித்துவிடும். இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் கூட  ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பைக் சேசிங் காட்சி படம் பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடைபெற்று வந்தது படப்பிடிப்பை முடித்ததும் அஜீத் உடனடியாக இந்தியா திரும்பாமல் ரசியாவிலேயே பைக் மூலம் சுற்றிப் பார்த்துள்ளார் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதுமட்டுமில்லாமல் ரஷியாவில் தங்கி தல அஜித் 5000 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது.

ajith bike
ajith bike

இந்த நிலையில் தல அஜித் அவர்கள் டெல்லி சென்றுள்ளார் அப்பொழுது அங்கு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியானது தல அஜித்  டெல்லிக்கு சென்றார் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது டெல்லிக்கு சென்ற தல அஜித் உலகம் முழுவதும் பைக்கிலேயே தனியாக பயணம் செய்த மாரல் யாசரலூவை நேரில் சந்தித்துள்ளார்.

அவர் இதுவரை ஏழு கண்டங்கள் 64 நாடுகளை பைக்கிலேயே சுற்றி உள்ளார் இவர் தற்பொழுது டெல்லியை வந்தடைந்துள்ளார் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பைக்கில் வலம் வர இருக்கும் அஜித் அவரை சந்தித்து சில ஆலோசனைகளை பெற்றதாக கூறப்படுகிறது.

ajith bike
ajith bike

Leave a Comment