மோகன்லாலை தொடர்ந்து பாலிவுட் நடிகரை சந்தித்த அஜித்! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

Actor Ajith
Actor Ajith

Ajith photo viral : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் அஜித். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். துணிவு படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் படம் பண்ண போவதாக அறிவிப்புகள் எல்லாம் வெளியாகிறது ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாவது பாதி சிறப்பாக இல்லாததால்..

அவரை நீக்கி விட்டு மகிழ் திருமேனியை  இயக்குனராக நியமித்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் வெளி வராததால் கடுப்பான ரசிகர்கள் அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் வந்தார்.

அவரைப் பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சி டேக் ஆஃப் ஆகுமா ஆகாதா என கேட்டனர் அதற்கு விடாமுயற்சி எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ப்ராஜெக்ட் நிச்சயம் ஷூட்டிங் தொடங்கும் என கூறினார். அதன் பிறகு ஆட்டோமேட்டிக்காக அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதாவது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அபுதாபி, துபாயில் நடக்கும் என்றும்..

படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வந்த வண்ணமே இருக்கிறது. மேலும் அர்ஜுன், அர்ஜுன் தாஸ் போன்றவர்கள் நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்தன இந்த நிலையில் அஜித் தொடர்ந்து டாப் நடிகர்களை சந்தித்து வருவதால் விடாமுயற்சி படத்தில் அவர்களும் நடிக்க போவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே மோகன்லால் அஜித்தை சந்தித்த புகைப்படம் பெரிய அளவில் வைரலான நிலையில் அடுத்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை அஜித் சந்தித்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

Ajith
Ajith