அட அஜித் படத்தில் மீரா மிதுன்.! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!

Bigg boss Meera Mithun act in ennai arinthal: கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சர்ச்சை நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு  முன் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவுக்கு பிரபலமடையவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தன்னை அழகி என்றும் மாடல் என்றும்  பீத்தி கொண்டு மிகவும் மோசமான அரைகுறை ஆடையில் திரிந்து கொண்டிருப்பார்.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான புகைப்படங்களை  பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கழவி ஊற்றி கமெண்ட் செய்வார்கள். ஊரடங்கு உத்தரவு அறிவித்ததிலிருந்து இவர் திரை பிரபலங்களான சிம்பு, வெங்கட்பிரபு, விஷால், அனிருத் போன்றோருடன் செல்பி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து உள்ளார். மேலும் எனது முதல் திரைப்பட வாழ்க்கை என்னை அறிந்தால் என்ற திரைபடத்தில் தான் தொடங்கியது என்றும் மேலும் ஒரு சில காரணங்களால் அந்த காட்சி திரையில் வெளிவரவில்லை என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லமால் நீங்கள் என்னை மறக்க மாட்டீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். என்னை அறிந்தால் படத்தின் அவர் நடித்து வெளிவரத அந்த  காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/meera_mitun/status/1256225784718598145?s=20

Leave a Comment