உதவி கேட்டு வந்த நடிகரை கண்டு கொள்ளாமல் போன அஜித் – கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்..!

0
ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் அண்மை காலமாக சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இன்னொரு படத்தை கொடுக்க இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக  வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இப்படி திரையில் ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் தன்னால் முடிந்த உதவிகளையும்  செய்து வருகிறார்.

அஜித் தான் செய்யும் உதவிகளை யாருக்கும் தெரிய கூடாது என நினைப்பார் ஆனால் அதையும் மீறி ஒரு சில தகவல்கள் வெளிவந்துவிடும் அப்படி ஒரு தகவலை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் ஷாலினி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் அமர்க்களம் இந்த திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து ரகுவரன், ராதிகா, நாசர், தாமு, வையாபுரி, சார்லி, பொன்னம்பலம் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் பொழுது ஒரு நாள் பொன்னம்பலம் தனது நண்பர் ஒருவரை படபிடிப்பிற்கு அழைத்து வருகின்றார் அந்த நபரை அஜித்திடம் அறிமுகப்படுத்திய பொன்னம்பலம் இவனது குழந்தைக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது ஆதலால் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறான் மருத்துவமனைக்கு பில் கட்ட பண உதவி தேவைப்படுகிறது கொஞ்சம் உதவ முடியுமா என கேட்டிருக்கிறார்.

இதனை கேட்டுக் கொண்ட அஜித் அந்த நண்பரிடம் மருத்துவமனை குறித்த தகவலை கேட்டு இருக்கிறார் மொத்தத்தையும் விசாரித்த அஜித் எதுவுமே சொல்லாமல் படபிடிப்பு தளத்திற்கு சென்று விட்டாராம் இவர் என்ன எதுவுமே கூறாமல் படபிடிப்பில் நடிக்க சென்று விட்டார் என வெகு நேரம் காத்திருந்திருக்கிறார்கள்.

மதிய உணவு இடைவேளை வந்த பொழுது அஜித் இடம் மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காக பொன்னம்பலம் அவர் அருகில் சென்றாராம் சார் நாங்க காலையிலேயே வந்து உதவி கேட்டோமே என ஞாபகப்படுத்துகிறார் அதற்கு அஜித் உங்கள் நண்பர் இன்னும் இங்கேதான் காத்துக் கொண்டிருக்கிறாரா நான் காலை 11 மணிக்கு மருத்துவமனையில் பணம் செலுத்தும் படி எனக்கு தெரிந்தவரிடம் கூறிவிட்டேன்.. அவரும் பணம் செலுத்தி விட்டார் உங்கள் நண்பரை உடனே மருத்துவமனைக்கு போக சொல்லுங்கள் எனக் கூறி பொன்னம்பலத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.