ரசிகர்களை விழுந்து விழுந்து கவனிக்கும் தல அஜித்..! இதுவரை யாரும் பார்த்திராத அறியா வீடியோ இதோ..!

பொதுவாக சினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் இருந்து வருகிறது ஆனால் இவை எதையும் கடைபிடிக்காமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு பயணித்து வரும் ஒரு நடிகர் என்றால் அது தல அஜித் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருப்பது மட்டும் இல்லாமல் இவருடைய திரைப்படங்கள் வெளிவந்தால் போதும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவது வழக்கமாக அமைந்துள்ளது மேலும் தனக்காக மன்றங்கள் அமைத்து ரசிகர்கள் வீண் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார் தல அஜித்.

இதனை தொடர்ந்து பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதையும் முற்றிலுமாக தவித்துவிட்டார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்கள் சினிமாவிற்கு வந்தால் போதும் தானாக யாரையும் அழைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதேபோல ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் உண்டு அந்த வகையில் ரசிகர்கள் அஜித்திற்கு தல என பெயர் வைத்திருந்தார்கள்.

ஆனால் அந்த பட்ட பெயரை வைத்தும் இனிமேல் என்னை அழைக்க வேண்டாம் என தல அஜித் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இவ்வாறு தொடர்ந்து தல அஜித் செய்யும் செயல் ஒவ்வொன்றும் ரசிகர்களை அதிர்ச்சியை உண்டாக்கியது மட்டும் இல்லாமல் ஆச்சரியத்தை மூட்டி உள்ளது.

மேலும் தற்போது ரசிகர்கள் சந்திப்பு அஜித் அண்ணன் புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற விஷயங்கள் நடக்காத ஒன்று ஆனால் இது போன்ற விஷயங்கள் பல வருடங்கள் முன்பு நடந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அப்பொழுது ரசிகர்கள் அஜித்தை சந்தித்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment