கேரளாவில் அதிக வசூல் செய்த தல அஜித் படங்கள் என்ன லிஸ்ட் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்பொழுது அஜித் அவர்கள் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை போனிகாபூர் அவர்கள் இயக்குகிறார். நேர்கொண்டபார்வை படத்தில் பணியாற்றிய படகுழுவினர் இப்படத்திலும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது. இப்படத்தில் ஹீரோயினாக ஹுமா குரிஷி அவர்கள் நடிக்கிறார் அதுமட்டுமிலமால் அவர் போலீஸாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளன.

தல அஜித் அவர்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அதுபோல கேரளாவிலும் அவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ்நாட்டில் எப்படி பெரிய அளவில் படம் ரிலீசாகிறது. அதுபோல கேரளா தல அஜித் ரசிகர்களும் பெரிய அளவில் ஓபனிங் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழிகளில் வெளியிட  திட்டமிட்டுள்ளனர் என்ன தகவல் வெளியாகியுள்ளன.தல அஜித் அவர்களின் படம் கேரளாவில் இதற்கு முன்பு அதிக வசூல் செய்த படங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

1.ஆரம்பம் -6.5 கோடி, 2.வேதாளம் -6 கோடி,3. விவேகம் -5.2 கோடி,4. என்னை அறிந்தால் -5 கோடி,5. விசுவாசம் -3 கோடி,6. நேர்கொண்ட பார்வை -2.5 கோடி. போன்ற படங்களாகும்.

Leave a Comment