தல அஜித்தையே மிரண்டு பார்க்க வைத்த புதிய திரைப்படத்தின் டீசர்.! அதற்க்கு என்ன சொன்னார் தெரியுமா.?

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வசூல் மன்னனாக வலம் வருகிறார் சமீபகாலமாக அஜித்தின் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் தற்போது அஜித் ஹச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அஜீத் சமீபத்தில் ஒரு புதிய தெலுங்கு திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு மிகவும் பிடித்த இருந்ததாக அந்த படக்குழுவினருக்கு போன் போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

தல அஜித் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது அதாவது தல அஜித் எப்போதும் வெளியே வரமாட்டார் என பல காலங்களாக கூறி வருகிறார்கள் ஆனால் அஜித் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அதனை அவரது நட்பு வட்டாரத்தில் இருந்து வெளி வரும் செய்திகளைப் பார்த்தால் நமக்கே தெரியும்.

மேலும் அஜித் வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது போல், தான் செய்யும் உதவி யாருக்கும் தெரிய வேண்டாம் என நினைப்பவர்.  ஆனால் எப்படியோ அஜித் செய்யும் உதவி அவரது ரசிகர்களுக்கு தெரிந்துவிடுகிறது.  அந்த வகையில் நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபொழுது ஒரு பையனுக்கு கல்வி உதவி செய்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தல அஜித் எந்த முன்னணி நடிகரின் திரைப்படமாக இருந்தாலும் சரி தனக்கு பிடித்துவிட்டால் போன் போட்டு வாழ்த்து கூறுவார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் பைக்ரேஸ்சை மையப்படுத்தி இதே மா கதா என்ற படம் உருவாகியுள்ளது.  இந்த திரைப்படத்தில் சுமந்த், பூமிகா சாவ்லா, தன்யா ஹாப் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது இதனை பார்த்த தல அஜித் தனக்கு மிகவும் பிடித்து விட்டதால் உடனே படக்குழுவினருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் இந்த டீசர் தன்னுடைய வாழ்க்கையுடன் ஈசியாக பொருத்தி பார்க்க முடிகிறது எனவும் பைக்ரேஸ் சீன்கள் தன்னை மிகவும் கவர்ந்த விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment