அரசனாக மிரட்டும் அஜித்.. இந்த கம்பீரம் யாருக்கு வரும்.!

Ajith Trending Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் அஜித்குமார். இவர் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறார். துணிவு திரைப்படத்தைக் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க..லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க உள்ளது.

விடாமுயற்சி படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது வெளி வருகின்ற செய்திகள் என்னவென்றால்.. படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் படத்தின் ஷூட்டிங் துபாய், அபுதாபி போன்ற வெளிநாடுகளில் தான் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படத்தில் திரிஷா ஹீரோயின்னாக நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், பிக் பாஸ் ஆரவ் போன்றவர்களும் நடிக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவல்களையும் லைகா இதுவரை வெளியிடவில்லை.

இருந்தாலும்  விடாமுயற்சி படத்திற்கான ஹைப் மட்டும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் குறையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்த அஜித்தின் AI புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

அதுபோல தற்போது நடிகர் அஜித் மன்னார் வேடத்தில் இருக்கும் இணையதள பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தட்டி வீசி கமெண்ட்டுகளையும் கொடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்  மன்னர் அவதாரத்தில் அஜித்.

Ajith
Ajith
Ajith
Ajith