“காதல் கோட்டை” அஜித் போல் உடல் எடையை குறைத்த AK.. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வருபவர் அஜித். இவர் திரையுலகில் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்தார் ஆனால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்ததால் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்த அசத்துகிறார்.

அஜித் கடைசியாக நடித்த “துணிவு” திரைப்படம் சமூக அக்கரை கலந்த ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருப்பதால் ரசிகர்கள் கடுப்பாகி தற்போது அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர். விடாமுயற்சி படக்குழு தரப்பில் இருந்து தற்போது எந்த தகவலும் வரவில்லை என்றாலும் சினிமா விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் விடாமுயற்சி படம் குறித்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் செய்யாறு பாலு இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கும் அஜித் படத்திற்காக தயாராகி வருகிறார் என சொன்னார் இவரை தொடர்ந்து  இயக்குனர் மோகன் ஜி விடாமுயற்சி படம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கப்படும் அஜித்  படத்திற்கு தயாராகி வருகிறார் என கூறி வந்தார்.

இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அஜித் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் காதல் கோட்டை அஜித் போல மாறிட்டீங்க எனக்கூறி பெரிய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Ajith
Ajith

Leave a Comment