மாடல் அழகியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த அஜித்குமார் – இப்பவும் வருத்தப்படும் அவரது ரசிகர்கள்.! யார் அது தெரியுமா.?

அஜித் ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து பல்வேறு சிறந்த படங்களை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் அஜித் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை நம்பி படத்தின் கதையை கேட்காமல் நடித்ததால் தொடர்ந்து ஒரு கட்டத்தில் தோல்வி படங்களை கொடுத்தார் அதை உணர்ந்து கொண்ட பின் அஜித் சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மெகா ஹிட் அடிக்கின்றன.

அந்த அளவிற்கு தற்போது சிறந்த இயக்குனருடன் கதையை கேட்டு நடித்து வருகிறார் தற்போது கூட சிறப்பான படங்களை எடுத்து வரும் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் பட்சத்தில் அஜித்தின் திரைப்பயணம் ஒரு உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருந்தாலும் இவர் சினிமா உலகில் பல்வேறு சிறந்த படங்களை மிஸ் செய்துள்ளார் அந்த வகையில் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்று இருந்த இயக்குனர் ஷங்கரின் ஜீன்ஸ் திரைப்படத்தில் அஜித் தான் முதலில் நடிக்க இருந்தாராம் ஆனால் அப்போது சில காரணங்களால் அஜித் அந்த படத்தை மிஸ் செய்து விடவே..

பின் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ஜீன்ஸ் திரைப்படத்திற்கு ஐஸ்வர்யாராய்க்கு இணையாக ஒரு சிறந்த நடிகரை தேடிக் கொண்டிருந்தார் அப்போது தான் நடிகர் பிரசாந்தை கண்டுபிடித்து அவரை ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிக்க வைத்தாராம். அஜித் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தார் அப்போது அவரது சினிமா வாழ்க்கை வேற லெவல் உள்ள ஒரு உச்சத்தை எட்டியிருக்கும் என்பதே..

அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பேச்சாக இருந்து வருகிறது எது எப்படியோ தமிழ் சினிமாவில் அடுத்த அடுத்த ஹிட் படங்களை கொடுத்து தற்போது அவர் உச்ச நட்சத்திரமாக இருப்பதால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version