Ajith Kumar super hit movies: ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யும் வகையில் பல திரைப்படங்களில் நடித்து வரும் அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை கட்டியுள்ளது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே ஓராண்டு ஓய்வு எடுத்த பிறகுதான் மீண்டும் அஜித் நடிப்பார் எனவும் சமூக வலைதளத்தில் தகவல்கள் வைரலாகி வரும் நிலை இது குறித்து அஜித் தரப்பிலிருந்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. 32 ஆண்டுகளாக சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் குமார் பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார்.
அதேபோல் தோல்வி திரைப்படங்களும் இருந்துள்ளது. அப்படி வசூல் நாயகனாக இருக்கும் அஜித்தின் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் குறித்தும் அந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. எனவே அஜித் நடிப்பில் வெளியாகிய மாபெரும் அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்த படங்கள் குறித்த விபரங்களை பார்க்கலாம்.
துணிவு – ரூ. 210+ கோடி, விஸ்வாசம் – ரூ. 190+ கோடி, வலிமை – ரூ. 170+ கோடி, விவேகம் – ரூ. 128 கோடி, வேதாளம் – ரூ. 125 கோடி, நேர்கொண்ட பார்வை – ரூ. 103 கோடி, ஆரம்பம் – ரூ. 101 கோடி, என்னை அறிந்தால் – ரூ. 95 கோடி, வீரம் – ரூ. 88 கோடி, மங்காத்தா – ரூ. 83 கோடி, பில்லா – ரூ. 51 கோடி, வரலாறு – ரூ. 40 கோடி, வில்லன் – ரூ. 33 கோடி, அட்டகாசம் – ரூ. 30+ கோடி, தீனா – ரூ. 25+ கோடி, வாலி – ரூ. 20+ கோடி, அமர்க்களம் – ரூ. 20+ கோடி
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் – ரூ. 20+ கோடி