நடிகர் அஜித்குமார் ஹச் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படத்தில் நடித்து அசத்தினார் இந்தப்படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் நல்ல ஒரு வேட்டையை நடத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார்.
மீண்டும் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி வைத்து உருவாக்குவதால் இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்காக அஜித் அதிரடியாக உடல் எடையைக் குறைத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்து இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவும் முனைப்பு காட்டி வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் 62வது திரைப்படம்.
அதிரடியாக உருவாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் 61வது திரைப்படத்திற்காக அதிரடியாக ஏற்கனவே 25 கிலோ உடல் எடையை குறைத்தார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் மேலும் 10 கிலோ உடல் எடையை குறைத்து ஆளே வேற மாதிரி அவதாரம் எடுத்துள்ளார்.
ஆம் சமீபத்தில் தனது ரசிகர் ஒருவர் உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அதில் அஜித் செம மாசாக இருக்கிறார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
