ரசிகர்களை திரும்பி பார்கவைத்த அஜித் அதிர்ந்த பிரபலங்கள்.! வைரலாகும் வீடியோ!!

தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தல போல நிற்பவர் தல அஜித். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். தற்பொழுது அவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்துள்ளார் தற்போதைய படத்தையும் அவர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரிஸ்கான காட்சியினை அஜித் அவர்கள் டூப் போடாமல் அவராக முன்வந்து அக்காட்சியை நடித்தார் அப்பொழுது அஜித் அவர்கள் விபத்துக்குள்ளாகினார். பதற்றமடைந்த அப்படக்குழுவினர் வந்து பார்த்த பொழுது அஜித் அவர்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. இருப்பினும் இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர் இருபின்னும் அவரது ரசிகர்கள் காயங்கள் குணமாக வேண்டும் என இறைவனிடம் பிராத்தனை பண்ணி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் அவர்கள் தன்னுடைய உதவி ஆய்வாளரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.

அவருடைய குடும்ப திருமணத்தைப் போன்று விருந்தினரை வாசலில் நின்று வரவேற்றார் இதனை பார்த்த பார்வையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரசிகர்கள் இணையதளத்தில் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர் மற்றும் சிலர் அஜித் ரசிகனாக இருக்க தனக்கு பெருமையாக உள்ளது எனவும் இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/unique_sendhil/status/1231069300632489984

Leave a Comment