ரொமான்டிக்.. கிளாமர்.. சீன்களில் பின்னி பெடலெடுக்கும் நடிகையுடன் கைகோர்த்த அஜித்.! AK 61 படத்தை வேற லெவலில் உருவாக்கும் வினோத்.

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக கதையை நன்கு தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. அதேசமயம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் அந்த திரைப்படங்கள் கவர்ந்து இழுத்தன.

குறிப்பாக விசுவாசம், நேர்கொண்டபார்வை அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து இப்பொழுதுகூட நடிகர் அஜித்குமார் இந்த வருடத்தில் இன்னொரு சிறப்பான படத்தை கொடுக்க ஹச். வினோத் மீண்டும் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கான வேலைகளிலும் படக்கழு தீவிரமாக இறங்கி உள்ளது . AK 61 படத்தில் வினோத்திற்கு இந்த தடவை முழு சுதந்திரம் அஜித் கொடுத்துள்ளதால் தனக்கு ஏற்றபடி படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து பல  முன்னணி ஜாம்பவான்களில் நடிக்க இருக்கின்றனர்.

என்ற தகவல் ஒரு பக்கம் வெளியாகி வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி வைத்து உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர் ஏற்கனவே வினோத் படமான தீரன் அதிகாரம்  ஒன்று திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது .

ரகுல் பிரீத் சிங் படங்களில் காதல், செண்டிமென்ட் போன்ற இடங்களில் சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அதேசமயம் கிளாமர் காட்சிகளையும் தாறுமாறாக நடிப்பார்.

ஆனால் தற்போது அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதால் இந்த படத்தில் சென்டிமென்ட் மற்றும் ரொமான்ஸ் சீன்கள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் ரகுல் பிரீத் சிங்கு பிடித்த  கிளாமர் கதாபாத்திரமும் இந்த படத்தில் இருக்காது . அஜித்திற்கு சுத்தமாகவே பிடிக்கவே பிடிக்காது அதை அவரது படங்களில் பெரிதும் பார்க்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment