ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் நாயகிகளுடன் கைகோர்க்கும் அஜித்..! வெளிவந்த விடாமுயற்சி அப்டேட்

Vidaamuyarchi : ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் அஜித் குமார் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக ன்படித துணிவு படம் வெளிவந்து  மாபெரும் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இருப்பினும் இரண்டு மாதங்கள் கழித்தும் எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரதால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்

இந்த நிலையில் தான் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த சுபாஷ்காரனிடம் விடாமுயற்சி அப்டேட் தாருங்கள் என கேட்டுக்கொண்டனர் இதற்கு அவர் பதில் அளித்தது அஜித்தின் விடாமுயற்சி படம் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு ப்ராஜெக்ட் வெகு விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிவித்தார் அதன் பிறகு இந்த படத்திற்கான அப்டேட் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணமே இருக்கிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அபுதாபி மற்றும் துபாய் போன்ற இடங்களில் நடக்க இருக்கிறதாம். முதலில் அஜித்துக்கான போர்ஷனை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அஜித்தும் துபாயில் ஏற்கனவே அலுவலகம் மற்றும் வீடு ஒன்றை வாங்கியிருந்தார் அங்கு தங்கி தனது படப்பிடிப்பை முடிப்பார் என கூறப்படுகிறது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா, திரிஷா போன்றவர்கள் நடிப்பதாக பேச்சுக்கள் எழுந்தன

ஆனால் தற்பொழுது அது மறுக்கப்பட்டுள்ளது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் என்பது உண்மை தான் ஆனால் தற்பொழுது தேர்வு லிஸ்டில் இருப்பது த்ரிஷா மற்றும் ஹீமா குரேஷி என கூறப்படுகிறது. ஹீமா குரேஷி இதற்கு முன்பு அஜித்தின் வலிமை திரை படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த படத்திலும் இவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.