வெற்றியோ.? தோல்வியோ.? சம்பவம் செய்யணும்.. மகிழ் திருமேனி இயக்கிய 5 திரைப்படங்கள்.! உங்களுடைய ஃபேவரைட் எது

Magizh Thirumeni : இயக்குனர் மகிழ் திருமேனி  ஆர்யா, அருண் விஜய், உதய நிதி போன்ற முக்கிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார். ஒரு சில படங்களில் நடிகராக நடித்தும் இருந்தும் இவரை நிறைய பேருக்கு தெரியாமல் இருந்தன. ஆனால் சில மாதங்களாக சோசியல் மீடியாவில் அதிகம் மகிழ் திருமேனியை பற்றி தான் தேடிக் கொண்டிருக்கின்றனர்..

ஏனென்றால் தற்பொழுது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் இந்த படத்தின் ஷூட்டிங்  விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன..  இந்த நிலையில் மகிழ் திருமேனி இயக்கிய 5 படங்களை பற்றி பார்ப்போம்..

சிம்பிளாக நடைபெற்ற ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தம்.. வைரல் புகைப்படம்

முன்தினம் பார்த்தேன் : செல்வராகவன், கௌதம் மேனன் போன்ற பிரபல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த மகிழ்த்திரு மேனி 2010 ஆம் ஆண்டு முன்தினம் பார்த்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.. இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது..

தடையறத் தாக்க : இந்த திரைப்படம் அருண் விஜய் கேரியரில் ஒரு திருப்புமுனை படமாக மாறியது.. ஆக்சன், திரில்லர் கதைகளம் கொண்டது. அவருடன் இணைந்து ரகுல் பரீத் சிங்க் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கண்டது.

பொங்கல் ரேசில் இருந்து விலக போகும் 4 படங்கள்.! அந்தரத்தில் தொங்கும் சிவகார்த்திகேயனின் அயலான்

மீகாமன் : ஆர்யா, ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படத்தின் கதை.. போதை பொருள் கும்பலை மொத்தமாக அழிப்பது தான்.. ஆர்யா அண்டர் கவர் போலீஸ் ஆக நடித்து இருப்பார்.  வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு வசூலையும் குவித்தது..

தடம் : இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்தார். படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக  இருந்தால் பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் அருண் விஜய்க்கு அதிக ரசிகர்களும் உருவாகினர்.

கலக தலைவன் : சமூக கருத்துகளை எடுத்துரைக்கும் படமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் உதயநிதி, நிதி அகர்வால், கலையரசன் ஆரவ் போன்ற பலர் நடித்திருந்தனர் கடந்த ஆண்டு வெளியான இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மகிழ்திருமேனி இதுவரை இயக்கிய 5 படங்களில் ஒன்னு, ரெண்டு படம் மட்டுமே ஹிட் அடித்து உள்ளது. ஆனால் தொடர்ந்து சினிமாவில் போராடிக் கொண்டிருப்பதால் அஜித் மகிழ் திருமேனிக்கு விடாமுயற்சி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.