சினிமாவில் இப்படிப்பட்டவர்கள் வளர்வது கடினம் அதை செய்து காட்டியவர் அஜித்.! மறைந்த நடிகர் பாண்டு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

0

தமிழ் திரை உலகில் பல நடிகர், நடிகைகள் மற்றும் குணச்சித்திர நடிகர்கள் தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நபராக வலம் வருகிறார் தல அஜித்.

இவர்கள் தான் இப்படி என்றால் தமிழ்நாட்டில் இருக்கும் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு தற்போது முன்மாதிரியாக வலம் வந்து கொண்டுகொண்டிருப்பதால் தமிழ் சினிமாவில் அதிக ஆண் ரசிகர்களை வைத்திருக்கும் நபராகவும் தற்போது உருவெடுத்துள்ளார் தல அஜித்.

இப்படி அனைவருக்கும் பிடித்த நபராக இருக்க காரணம் சினிமாவில் எப்போதும் ஓபன் ஆக பேசுவது சினிமா நேரம் போக  தனது குடும்பத்தைப் பார்த்து கொள்வது  மற்ற நேரத்தில் தனக்கு தெரிந்தவற்றை ஈடுபட்டால் அதில் வெற்றி காண்பது மேலும் மக்களுக்கு தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருவதால் அவரை அனைவருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த நபராக இருக்கிறார்.

அஜித் தற்போது ஹச் . வினோத்துடன்  இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படம் இன்னும் இறுதி கட்ட படப்பிடிப்பு எடுக்க தற்போது காத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட் வராமல் இருப்பதால் ரசிகர்கள் தற்போது வரையிலும் செம அப்செட்டில் இருக்கின்றனர் இருப்பினும் மற்ற செய்திகள் வெளிவந்து தல ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்து வருகிறது.

அந்த வகையில் திரைவுலகில் காமெடியாக வந்து பின் தனது திறமையை வளர்த்துக்கொண்டு பலவற்றில் வெளிக்காட்டி சிறப்பாக வலம்வந்த நடிகர் பாண்டு சமீபத்தில் இவர் இயற்கை எய்தினார் இவர் அஜித் குறித்து சமீபத்தில் மீடியா ஓன்றில்  பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் கூறியது. சிவசக்தி மூவர்ஸ் தயாரித்த 9 படங்களில் நான் நடித்தேன் இந்த தயாரிப்பு நிறுவனம் பெரும்பாலும் அஜித்தை வைத்து விட்டது படங்களை எடுத்து இருந்தது அதில் அனைத்திலும் நான் நடித்தேன்.

வான்மதி படத்தில் அஜித்துக்கு அஜித்துடன் நடித்தேன் அதன் பிறகு ஆசை படத்தில் என்னை அழைத்து இந்தப்படத்திலும்  நடியுங்கள் என்று சொன்னார்கள் உங்களது ஒரு சின்ன கதாபாத்திரம் என்று கூறினார்கள் இதற்கான மந்தவெளியில் இருந்து ஸ்டூடியோவிற்கு வந்தேன் வந்தவுடன் நான் அஜித்தை பார்த்து பேச வேண்டும் என்பதுதான் என் மனதில் இருந்தது ஆனால் போய் டிரஸ் போட்டுக்கொண்டு படத்தின் சீனில் நடிக்க சொன்னார்கள்.

இயக்குனர் என் கையை பார்த்து 143 என்று சொல்லுங்கள் போதும் என்றார் நானும் சொன்னேன் பாண்டு சார் உங்கள் கதாபாத்திரம் முடிந்துவிட்டது நீங்கள் கிளம்பலாம் என கூறினார்.

நான் டிரஸ் போட்டா நேரம் கூட அந்த படத்தில் நான் நடிக்கவில்லை அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் அஜித்துடன் இணைந்து நடித்தேன் வில்லன், வரலாறு, காதல் கோட்டை, ஆஞ்சநேயா, வாலி, சிட்டிசன், வான்மதி போன்ற தொடர் அஜித் படங்களில் நடிப்பேன்.

அஜித்த உண்மையிலேயே இது ஒரு மிகச்சிறந்த மனித ஏனென்றால் சினிமாவில் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள் வெகு சிலரே ஆனால் அதில் அஜித் முதன்மையானவர் எப்பொழுதும் முகத்துக்கு நேராக மனதில் பட்டதை நேரடியாக சொல்லக்கூடியவர் இப்படிப்பட்டவர்கள் சினிமாவிலிருந்து ஜெயிப்பது கடினம் ஆனால் அதை செய்து காட்டியவர் அஜித் ஒருவர். அதனால் அவர் எனக்கு மிக மிக பிடிக்கும் என ஓபன்னாக சொன்னார் பாண்டு.