பைக்கில் சாகசம் செய்யும் தல அஜித்.! ரசிகர்களுக்கு வெளிவந்த கிளிப்ஸ் வீடியோ.!

0

தமிழ் சினிமா பயணத்தில் தல அஜித்திற்கு ஒரு திருப்புமுனையாக பல திரைப்படங்கள் அமைந்துள்ளது அந்த வகையில் பார்த்தால் தல அஜித்தின்திரைப்பயணத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தான் வலிமை இந்தத் திரைப்படம் கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான நாங்க வேற மாதிரி என்ற பாடலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் கூடிய சீக்கிரம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இருக்கிறதா என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில்.

பல சினிமா பிரபலங்களும் இந்த திரைப்படம் கண்டிப்பாக வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என கூறிவருகிறார்கள் இந்நிலையில் தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.மேலும் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.