பிரபல நடிகரின் தங்கைவயுடன் சிறுவயதில் இருந்து பிரண்ட்ஷிப்பை தொடரும் அஜித்.! வைரலாகும் வீடியோ.!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்.இவர் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் இவரை பலகோடி ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் அவர்கள் சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியாக இருப்பதால் தான் அவரை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன நபராக இருக்கிறார் என பல பிரபலங்கள் கூறியதை நாம் கேட்டுள்ளோம்.

அஜித் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷபடுத்தி வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து அவர் தற்போது இளம் இயக்குனரான ஹச். வினோத்வுடன் இணைந்து தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரிக்கிறார்.

நேர் கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் இப்பொழுது இந்த படத்திலும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் சற்று மன வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் வலிமை படத்தின் இயக்குனரான வினோத் அவர்கள் இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியிருந்தார். அவர் கூறியது இப்படம் அடுத்த மங்காத்தா போல இருக்கும் என கூறியிருந்தார் இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அஜித் ரசிகர்கள் அஜித் பற்றிய செய்தி மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரான பிரிதிவிராஜ் என்கின்ற (பப்லு) யூடியூப்  சேனல் ஒன்றில் அஜித்தை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியது அஜித் தான் என் தங்கையை பள்ளியில் அதிக டார்ச்சர் பண்ணியது தான் என கூறியிருந்தார் பழைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment