வேற லெவலில் பாடல் உருவாக முக்கிய காரணம் அஜித் இல்ல.? இவர் தான்- யுவன் ஷங்கர் ராஜா வெளிப்படை.

இயக்குனர் ஹச். வினோத் அஜித்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து “வலிமை” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.  இப்படத்தின் சூட்டிங் இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து கனவு கோட்டைகளை கட்டி வந்த நிலையில் அவர்களை சந்தோஷப்படுத்த படக்குழு தற்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு கொண்டாட வைத்தனர்.

அதை தொடர்ந்து வலிமை படக்குழு மீண்டும் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட்டு ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது. மேலும் “வேற மாதிரி” பாடல் அஜித்தின் வாழ்க்கையை அப்படியே சொல்வது போல இருந்ததால் அஜித் ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடினார்.

இந்த பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறி உள்ளது வினோத் சார் இந்த பாடல் செம்ம மாஸாக இருக்க வேண்டும் என தெரிவித்தார் அதை மனதில் வைத்துக்கொண்டு நம்ம அஜித் சார் பற்றி ஒரு பாடல் சிறப்பான சம்பவம் செய்ய வேண்டும் என நினைத்து இந்த பாடலை கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

தற்பொழுது இந்த பாடல் தல ரசிகர்களையும் தாண்டி வாழ்க்கையில் ஒவ்வொரு படியையும் முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு இந்தப் பாடல் ஒரு நல்லதொரு விஷயத்தைச் சொல்லும் பாடலாக இது அமைந்துள்ளது இதனால் பட்டி தொட்டி எங்கும் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment