அஜித்தின் வீரம் திரைப்படத்தில் நடித்த நடிகை வித்யூலேகா ராமன்னுக்கு திருமணம் முடித்து – அழகிய புகைப்படம் இதோ.

ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம் இந்த திரைப்படத்தில் சமந்தாவுக்கு தோழியாகவும் காமெடி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை வித்யூலேகா ராமன் இதுவே அவருக்கு முதல் திரைப்படம்.

திரைப்படத்தை காதல் சம்பந்தப்பட்ட படமாக எடுத்து மக்களின் மற்றும் காதல் ஜோடிகளின் அன்பை சம்பாதித்து இருந்தார் இயக்குனர் கௌதம் மேனன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை வித்யூலேகா ராமன் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். மேலும் விஜய்யின் ஜில்லா திரைப்படத்திலும் காமெடியில் பின்னி பெடலெடுத்தார்.

அதைத்தாண்டி தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த வித்யூலேகா ராமன் ஆள் பார்ப்பதற்கு குண்டாக இருந்ததால் ரசிகர்கள் நீங்கள் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாதிரினால் இன்னும் படவாய்ப்பை கைப்பற்றலாம் என கூறி கமெண்ட் அடித்தனர் அதற்காக அவர் உடல் நிலையை குறைந்து பார்த்தாலும் ஓரளவிற்கு மேல் அவரால் குறைக்க முடியவில்லை.

மேலும் உடலுக்கு ஏற்றவாறு அரைகுறையான உடையில் வாய் பிளக்க வைத்தார். சமீபத்தில் கூட இவர் பிக்னிக் உடையில் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடும் புகைப்படம் வேற லெவலில் லைக்குகளை குவித்தது. சினிமாவிலும் நிஜத்திலும் செம ஜாலியாக இருக்கும் வித்யுத்லேகா ராமன் கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து வருங்கால கணவர் சஞ்சய் உடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  தீயாய் பரவி பலரையும் ஆச்சரியப்படுத்தியது இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது பிரபல நடிகை வித்யூலேகா ராமன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் தீயாய் பரவின அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

viduylekha raman
viduylekha raman
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment