ரசிகர்கள் எதிர்பார்த்த.. கதாபாத்திரத்தில் நடிக்க போகும் அஜித்.? அதுவும் எந்த இயக்குனர் படத்தில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் அஜித் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர்கள் என கூறப்படுகிறது.  முன்பைப் போல அஜித் இயக்குனர்களை நம்பாமல் கதையை கேட்டு பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் கமிட்டாகி நடிக்கிறார்.

அதனால்தான் அவரது சமீபத்திய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கிறது.  இயக்குனர் ஹச். வினோத் உடன் இரண்டு முறை இணைந்த நிலையில் மூன்றாவது முறையும் அவருடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின அது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அஜித்தும், இரண்டும் கை கோர்த்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய உள்ளன வலிமை படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.  ஹச். வினோத் தொடர்ந்த சிறப்பான கதைகளை எழுதி வருகிறார். இந்த நிலையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்திற்கு ஒரு கதையை ரெடி செய்து உள்ளார்.

அந்த கதையை  கேட்டுவிட்டு ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. வாலி, மங்காத்தா போன்ற இந்த கதையும் ஒரு நெகட்டிவ் ரோல் கதை என்பதால் அஜித் தனது வித்தியாசமான நடிப்பை இதில் நீங்கள் பார்க்கலாம் என தெரியவருகிறது. வலிமை திரைப்படமே வெளிவரவில்லை.

அதற்குள் இப்படி ஒரு தகவல் வெளியாகி உள்ளது தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும் இதுபோன்ற ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் அந்த படம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது அதை தற்போது இவர் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment