வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மறுபடியும் விஜய்யுடன் மோத போகும் அஜித்.! இந்தமுறை பெரிய சம்பவமே இருக்கு.. ஏகே 62ல் இருந்து வெளியான புதிய தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் சமீபத்தில் வெளியான வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் மூலம் பல வருடங்கள் கழித்து மோதிக்கொண்டனர் இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. அது மட்டுமல்லாமல் இரண்டு தரப்பு ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த இரண்டு படமும் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் இரண்டு படமும் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இருந்தாலும் துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படமான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான்.

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றி படங்களை இயக்கி வந்தார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் டைட்டில் ப்ரமோவுடன் படக்குழுவினர் அறிவித்திருந்தார். அந்த வகையில் லியோ திரைப்படம் ஆயுதபூஜை முன்னிட்டு வெளியாக இருப்பதாக பட குழு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தொடங்கும் முன் சில சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் அனைத்து பிரச்சனையும் முடித்துவிட்டு தற்போது படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் மூலம் மோதிக்கொண்ட அஜித் மற்றும் விஜய் இருவரும் மறுபடியும் லியோ மற்றும் ஏகே 62 திரைப்படத்தின் மூலம் மோத உள்ளதாக சினிமா வட்டாரத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மோதலில் இருந்து மீலாத ரசிகர்களுக்கு அடுத்த பரபரப்பான தகவலாக இது அமைந்திருக்கிறது.

ஆனால் இது உண்மையான தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இது ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இன்னும் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அப்படியே தொடங்கினாலும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் இந்த முறை இவர்கள் இருவரும் மோதிக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment