மார்க்கெட் இல்லாத நடிகர் அஜித்.? மீண்டும் பிரச்சினையை கிளப்ப பார்க்கும் பிரபல தயாரிப்பாளர்.!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். சினிமா உலகில் பல வெற்றி/ தோல்வி படங்களை கொடுத்தாலும் தவிர்க்க முடியாத ஒரு நபராக சினிமா உலகில் பயணிக்கிறார் அண்மை காலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் ஆகின்றன.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அதிகம் தோல்வி கொடுத்துக் இருந்தார். அஜித்திற்கு யாரையாவது ஒருவரை ரொம்ப பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பார் அதேசமயம் பிரச்சனை ஏற்பட்டால் அவரிடமிருந்து விலகியும் இருப்பார் அப்படித்தான் அஜித் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்த பல படங்களில் அஜித் நடித்து உள்ளார்.

இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தாலும்,  அந்த படங்கள் பெரிய அளவு வெற்றியை ருசிக்காமல் போனதால் நஷ்டக் கணக்கு காட்டி அஜித்திடம் பிரச்சனையை ஏற்படுத்தியது இதனால் ஒரு கட்டத்தில் பஞ்சாயத்து நடந்து ஒரு வழியாக முடிந்தது. அதன் பின் இருவரும் பிரிந்து விட்டனர் அண்மையில் பேட்டி ஒன்றில் சக்கரவர்த்தி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் நான் பெரும்பாலும் இளம் இயக்குனர்களுக்கு அதிகம் வாய்ப்பு தருவேன் அப்படித்தான் கதையை நம்பி இயக்குனர் எஸ். ஜே. சூர்யாவுக்கும் வாய்ப்பு கொடுத்தேன்.  படத்தின் கதை மிகவும் பிடித்துப்போனது கண்டிப்பாக இந்த படம் வெற்றி அடையும் என்றும் அஜித்தை வைத்து இந்த படத்தை தயாரித்தேன் அந்த சமயம் அஜித்துக்கு மிகப் பெரிய மார்க்கெட் இல்லை அந்த படம் வெற்றி அடைந்தால் தான் மார்க்கெட் என்ற நிலைமை இருந்தது என குறிப்பிட்டார்.

ஆனால் அஜித் வாலி திரைப்படத்திற்கு முன்பாகவே காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல சிறப்பான படங்களில் நடித்திருந்தார். அப்பொழுது அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் ஆனால் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி அஜித்தின் மீது இருந்த கோபத்தின் காரணமாக அஜித்குமாருக்கு மார்கெட் இல்லை என சக்கரவர்த்தி கூறி உள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.