400 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் அஜித்..! பிரபல இயக்குனருடன் பேச்சு வார்த்தை.? ரகசியத்தை உடைத்த பிரபலம்

Ajith : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வருபவர் அஜித் குமார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் வெற்றி படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் அஜித் பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  இவர் திறமையான நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அந்த வகையில் வரலாறு, வில்லன், மங்காத்தா, சிட்டிசன் என பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடத்திய ரசிகர்களுக்கு தீனி போட்டார் இப்படிப்பட்ட அஜித் விஷ்ணுவர்தனுடன் கைகோர்த்து பில்லா, ஆரம்பம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தனர்.

விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து ஒரு பெரிய பட்ஜெட்டில் படம் பண்ண வேண்டும் என திட்டமிட்டார். அதற்காக ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதை மையமாக வைத்து படமாக உருவாக்க திட்டமிட்டு இருந்தார் அதில் அஜித் தான் ஹீரோவாக நடிப்பதாகவும் இருந்தது.

அந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடி என முடிவும் செய்திருந்தனர் ஆனால் அந்த நேரத்தில் விஷ்ணுவர்தனுக்கு தமிழையும் தாண்டி பாலிவுட்டில் ஷேர்ஷா என்னும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது அஜித் மற்ற படங்களில் பிஸியாக நடித்திருந்ததால் அது அப்பொழுது கைவிடப்பட்டது.

Vishnu varthan
Vishnu varthan

ஆனால் தற்போது விஷ்ணுவர்தனும், அஜித்தும் இது குறித்து பேசி வருவதால் வெகு விரைவிலேயே படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அந்தணன் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தை இது போன்ற வித்தியாசமான படங்களில்  பார்க்க ஆவலாக இருக்கிறோம். இது நடந்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறிய ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.