ரொம்ப வீக்கான மனுஷன் அஜித்.. பேட்டியில் உண்மையை சொன்ன ஸ்டன்ட் மாஸ்டர் கனல்கண்ணன்.!

நடிகர் அஜித்குமார் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றியை அள்ளினார். காலம் போகப்போக நடிகர் அஜித் தன்னை மாற்றிக்கொண்டார் குறிப்பாக ஆக்சன் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை குவிக்க மறுபக்கம் அவருக்கு ரசிகர்களும் உருவாக்கினார்.

அப்போதிலிருந்து  இப்போ வரை அஜித் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடிக்க வருகிறார். அஜித் படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் காமெடி சென்டிமெண்ட் சீன்கள் என அனைத்தும் இருந்தாலும் அதில் அதிகமாக ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை நீங்கள் தான் அஜித்தின் வலிமை படத்தில் கூட பார்த்திருக்க முடியும். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார் அந்த படங்களில் கூட அஜித்தின் ஆக்சன் சீன்கள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. காரணம் அவரது ரசிகர்களுக்கும் ஆக்சன் சீன்கள் ரொம்ப பிடிக்கும்.அஜித்தும் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது அசல் படத்தின் போது நடிகர் அஜித்துக்கு முதுகில் மிகப்பெரிய ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது.

அதனால் அப்போது strength இல்லாமல் ரொம்ப வீக்காக இருந்தார். இருப்பினும் தனது ரசிகர்களுக்காக ஸ்டன்ட்களைச் செய்து அசத்தினார். அவரால் எந்த விஷயமும் முடியாது என்று மட்டும் சொல்வது கிடையாது அவர் நம்பிக்கை வைத்து ஒவ்வொன்றையும் செய்து வெற்றிகளை குவிக்கிறார்  என கூறி பேசினார் கணல் கண்ணன்.

Leave a Comment