அஜித் படத்தை பார்த்து அசந்து போன பிரபல நடிகர் – பல வருடங்கள் கழித்து நிகழ்ச்சியில் பேசிய சிவா.! இப்ப ரெண்டு பேரும் புதிய படத்தில் இணைய போறாங்க..

siva and ajith
siva and ajith

தமிழ் சினிமாவில் உள்ள புதுமுக இயக்குனர்கள் சிறப்பான கதையை நடிகர்களுக்கு கொடுத்து வெற்றியை பெற்று வருகின்றனர் அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் இயக்குனராக ஓடிக்கொண்டிருந்த சிறுத்தை சிவா சமீபகாலமாக தமிழ் சினிமா பக்கம் டாப் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் கார்த்தியை தொடர்ந்து அஜித்தை வைத்து நான்கு ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் அதன்பின் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை கொடுத்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி தற்போது வெற்றி நடை கண்டு வருகிறது.

இதுவரை மட்டுமே அண்ணாத்தா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது இந்தப் படத்தின் நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் சிறுத்தை சிவா கலந்து கொண்டார் அப்போது தனது படங்களை பற்றி பேசினார்.

அதில் ஒன்றாக அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த படத்தை தளபதி விஜய் பார்த்துவிட்டு பாராட்டினாராம். மேலும் தளபதி விஜய் சிறுத்தை சிவா படத்தை தொடர்ந்து பார்த்து பாராட்டி வருகிறார்.

இருவரும் ஆபீஸில் சந்திக்க கொள்வது அடிக்கடி நடக்கிறதாம். வெகு விரைவிலேயே தளபதி விஜயை வைத்து படம் எடுக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொல்லியுள்ளார் இத்தகவல் தற்பொழுது தளபதி ரசிகர்களை சந்தோஷம் அடைய வைத்துள்ளது.