சினிமாவையும் தாண்டி மற்ற செயல்களின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்து இருப்பவர் தல அஜித். சும்மா வந்தோம் நடிச்சோம் என்று இல்லாமல் முன்மாதிரியாக இருக்கும் வகையில் சமூக அக்கறை உள்ள படங்கள் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் துப்பாக்கி சுடுதல், ட்ரோன் ஒட்டுதல், கார், பைக் ரேஸ், சமைத்தல் போன்றவற்றில் தனன்னை ஈடுப்படுத்தி சிறப்பான செயல்களை செய்து அசத்துகிறார்.
அந்த காரணத்தினால் ரசிகர்கள் அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள் எப்படி கொடுக்கிறார்களோ தனது ரசிகர்களுக்காக சினிமாவில் எந்த ஒரு சீனுக்ககவும் டூப் இல்லாமல் நடித்து அசத்துகிறார். அஜித்தும், ரசிகர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதால் பார்ப்பவர்களுக்கு நல்ல விருந்தாக அமைகின்றன.
இப்போது கூட நடிகர் அஜித் “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ரசிகர்களும், அஜித்தும் தற்போது அந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் மேலும் வலிமை படக்குழு மீண்டும் ஒருமுறை இந்த கூட்டணியை அடுத்த திரைப்படத்தில் இணையாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
ஆனால் அதற்கு முன்பாக ஓய்வு என்ற பெயரில் பைக்கை எடுத்துக் கொண்டு இந்தியாவை சுற்றித்திரிந்து வருகிறார் மேலும் அவர் செல்லும் முக்கிய இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பல இடங்களில் மக்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது சோலோவாக பாலைவனத்தில் இவர் தண்ணீர் குடிக்க வண்டியை நிப்பாட்டி விட்டு இவர் சாய்ந்தபடி தண்ணீர் குடிக்கும் அந்த அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
