தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் மகாநதி சங்கர். இவர் திரையுலகில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும், காமெடியனாகவும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் கமலஹாசனின் மகாநதி திரைப்படத்தில் ஜெயில் வாடனாக நடித்து அறிமுகமானார்.
இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததால் தனது பெயருடன் மகாநதியை இணைத்து கொண்டார் அதன் பிறகு திரை உலகில் செல்லமாக “மகாநதி சங்கர்” அழைக்கப்பட்டார். அதன் பிறகு மகாநதி சங்கர் தமிழ் திரை உலகில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களுடன் படம் பண்ணினார் அப்படி தான் அஜித்தின் தீனா திரைப்படத்தில் அடியாளாக நடித்திருப்பா.
ர் இந்த படத்தில் வரும் வத்தி குச்சி பாடலுக்கு முன்பு தல இருக்கும் பொழுது வால் ஆடக்கூடாது நீ ஆடு தல என சொல்வார் அன்றிலிருந்து அஜித்தை அனைவரும் தல என செல்லமாக அழைத்து வந்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் துணிவு திரைப்படத்தில் மகாநதி சங்கர் நடித்தார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாநதி சங்கர் அஜித் குறித்து பேசி இருந்தார் அதில் அவர் சொன்னது துணிவு செட்டுக்கு நுழைந்த போது அஜித் என்னை 10 நிமிடம் கட்டிப்பிடித்தார். பின்னர் அஜித், நிரோ ஷா ஒளிப்பதிவாளரிடம் முதன்முதலில் தல என்று பெயர் வைத்தது மகாநதி சங்கர் தான்..
எனக் கூறி அஜித் மகாநதி சங்கரை அறிமுகப்படுத்தி வந்தாராம் அந்த தருணம் மகாநதி சங்கருக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்ததாக அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அப்போ பார்த்த அஜித் போலவே தான் இப்பவும் கல்லாகபடம் இல்லாமல் வெளிப்படையாக பேசுகிறார் என கூறினார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.